எமது செயற்பாடுகள்:
மாணவர்களின் ஆற்றுகையினால் வெளிப்படுவது அறிவு, திறன், மனப்பாங்கு என்பன ஆகும். கல்வியின் நோக்கமும் இந்த மூன்று விடயங்களையும் உள்ளடக்கிய மாணவர்களை உருவாக்குவதேயாகும். எனினும் அறிவு, திறன் ஆகிய இரண்டும் மாணவரிடத்திலே பொதிந்துள்ளமையினைக் கல்வியாளர்கள் எடுத்துரைக்கின்றனர். ஆனால் மனப்பாங்கு இன்னும் அவர்களிடத்திலே வளர்ச்சியடையவில்லை என்ற குறை உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் பாடசாலையில் அறிவையும் திறனையும் பெறும் வகையிலே கல்வி புகட்டப்படுகின்றது. மனப்பாங்கு வளர்ச்சிக்கான செயற்பாடுகள் போதுமான வகையில் பொருத்தமாக வழங்கப்படுவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட கல்வியாளர்கள் பாடசாலைக் கல்வியில் இணைப்பாடவிதானத்தின் இன்றையமையாமையினை வலியுறுத்திச் செயற்படுத்தலாயினர்.
பாடசாலைகளில் செயற்பாட்டில் உள்ள இணைப்பாடவிதானச் செயற்பாடுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள், பாட அடிப்படையிலான போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், தமிழ்த் தினப் போட்டிகள், முதியோர், சிறுவர் தின விழாக்கள், மது ஒழிப்பு தினம் போன்ற பிற செயற்பாடுகளும் வருடா வருடம் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளின் வழி விழுமிய சிந்தனை கொண்ட மாணவர் சமுதாயத்தினை உருவாக்க முடியும் என்பது தெட்டத் தெளிவாக ஆராயப்பட்ட விடயமாகும். இத்தகைய செயற்பாடுகளை ஒளிக்கல்லூரியும் ஆற்றுகைக்கு உட்படுத்தி சிறந்த மாணவர் சமுதாயத்தினை உருவாக்கியுள்ளது. இவ்வகையில் கல்விப் பணிகள் பலவற்றுக்கு மத்தியில் பின்வரும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளையும் ஒளிக்கல்லூரி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
01. நவராத்திரி விழா
02. இல்ல விளையாட்டுப் போட்டி
03. பாரதி விழா
04. ஒளி சஞ்சிகை வெளியீடு
05. கண்ணீர் அஞ்சலி நிகழ்த்துதல்
06. எண்ணெய்ச் சிந்து பாடுதல்
07. சீட்டிழுப்பு நடத்துதல்
08. பொன்னாடை போர்த்தல்
09. கருத்தரங்குகள் நடத்துதல்
10. சூழல் பாதுகாப்புக் கருத்தரங்குகள் நடத்துதல்
11. தென்னங்கன்று வழங்குதல்
12. உளநலப் பயிற்சி கொடுத்தல்
13. காகிதாதிகள் வழங்குதல்
14. அநாதை மாணவர்களுக்கு உதவுதல்