Blessings



ஆசிகள்:

ஸ்ரீமத் சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ்:

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் புண்ணிய பூமியில் முனைக்காடு எனுமிடத்தில் கல்வி ஒளிபரப்பும் ஒளிக்கல்லூரிக்கு ஆசி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னம் யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்என்ற வரகவி சுப்பிரமணிய பாரதியின் கூற்றுக்கிணங்க இப்பிரதேசத்தில் நல்லவர்கள், வல்லவர்கள், கல்விமான்கள் பலரை உருவாக்கியதோடு இன்னும் பலர் உருவாக அயராது உழைத்து வருவது இக்கல்லூரி எனில் மிகையாகாது.

திரு சுந்தரம் டிவகலாலா (வடகிழக்கு மாகாண கல்வி கலாசார அலுவல்கள், விளையாடு அமைச்சின் செயலாளர்)

தொண்டர் நிறுவனமாக இயங்கிக் கைம்மாறு கருதாது அரிய பல சேவைகளைப் புரிந்து வரும் ஒளிக்கல்லூரி நிறுவனத்தின் பணிகள் பற்றிக் கேள்வியுற்று வியப்படைந்தேன். தாம் பெற்ற கல்விச் செல்வத்தைத் தன்னலம் கருதாது மற்றவர்களுக்கு வழங்கி தாம் வாழும் சமுதாயத்துக்கு அளப்பரிய பணியாற்றும் இவ்விளைஞர்களின் அர்ப்பண சிந்தனை பாராட்டுக்குரியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல துறைகளிலும் வளர்ச்சி குன்றியதாகக் காணப்படும் படுவான்கரைப் பிரதேசத்தில் அறிவொளியைப் பரப்பி அதனூடாக வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளிக்கல்லூரியின் பணிகள் மென்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன்.

திரு. சி. குமாரசாமி (மண்முனை தென்மேற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்)

கல்விச் செயற்பாடுகளைப் பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டாலும், தற்போதைய சூழ்நிலைக்கு அமைய மேலதிக வகுப்புக்களை நடத்துதல், ஊக்குவிப்புகள் செய்தல், மீள்பயிற்சிகள் வழங்குதல், கருத்தரங்குகள் நடத்துதல் ஆகிய மேற்கொள்ள முடியாத நிலையில் மேற்படி செயற்பாடுகளை முன்னின்று நடத்திய தொண்டர் நிறுவனம் ஒன்று கூறுவதென்றால் அதுஒளிக்கல்லூரிஎன்றுதான் சொல்ல வேண்டும். ஒளிக்கல்லூரி இப்பிரதேசத்தில் அமைந்த நோக்கமே கல்வி முன்னேறம் கருதியே என்பதை அதன் நோக்கம் தெளிவாகக் காட்டுகின்றது. “ஆகுக, ஆக்குகஎன்ற அடிப்படையில், தான் பெற்ற கல்விப் பயனை மற்றவர்களும் பெற ஆவண செய்தல் கடந்த காலங்களில் கல்விப் பணியினரோடு சேர்ந்து .பொ.. சாதாரண தர வகுப்புகளுக்குப் பயிற்சிக் கருத்தரங்குகள் இலவசமாக நடத்தியும் வந்துள்ளது.

திரு எஸ். மனோகரன் (மட்டக்களப்பு மாவட்ட கல்விப் பணிப்பாளர்)

பணமிருந்தால்தான் பிரத்தியேகக் கல்வி கிடைக்கும்என்ற கருத்து அழுத்தம் பெற்று வரும் இக்காலத்திலே, “அப்படியன்று இலவசமாகவும் பிரத்தியேகக் கல்வி கிடைக்கும்என்ற கருத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உங்கள் ஒளிக்கல்லூரியை முதலில் பாராட்டுகிறேன்.

திரு .. அருள் அன்னராஜா (மண்முனை தென்மேற்கு பிரதேச பிரதிக் கல்விப் பணிப்பாளர்)

ஒளிக்கல்லூரியினர் சாதனைகள் பல புரிந்து சோர்வின்றி கல்விப் பணியினை இதய சுத்தியுடன் ஆற்றி வருகின்றனர். அவர்களின் பணி மகத்தானது, பாராட்டுக்குரியது. இக்கல்லூரியினை நிறுவியவர்களையும் நன்றியுணர்வுடன் நினைவு கூர வேண்டியது நமது தலையாய கடமை. அவர்கள் ஆற்றும் தன்னலமற்ற பணி பாராட்டுக்குரியது. அண்மைக் காலங்களில் ஒளிக்கல்லூரி கல்வி கலாசார பணிகள் மட்டுமல்ல சமூக அபிவிருதி, புனர்வாழ்வுப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தனக்கென ஓர் இடத்தை வகித்துக் கொண்டுள்ளதென்றால் அது மிகையாகாது.

முத்தையா முனிவர் எழுதிய கடிதம்

ஒளிக்கல்லூரியைப் பாராட்டுகின்றேன், போற்றுகின்றேன். இது மக்கள் மனதில் காலத்தால் மாறாத இடம்பெற்று பல கருத்துக்களைத் தந்து இலங்கை பூராவும் மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்யும். ஏனைய நாடுகளும் இவ்வொளியின் கருத்துக்களை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் போற்றும் புகழும் இவ் ஒளிக்கல்லூரியை பல சிரமங்களுக்கு மத்தியில் பெரும் முயற்சியில் வளர்த்து வரும் திரு மா. செல்வராஜா அவர்கள் பல்லாண்டு காலம் பெரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என வாழ்த்துக் கூறுவதோடு இவ்வொளிக் கல்லூரிக்கும் எனது மனமுவந்த நல்லாயிரம் வாழ்த்தும்.