Welcome to
College of Light
(Olik Kalloori)
சுலோகம்:
எம்மக்கள் கல்வியொளி பெறுதல் வேண்டும்
எம்மக்கள் கல்வியொளி பெறுதல் வேண்டும்
அவ்வொளியால் அறியாமை அகல வேண்டும்
வீறு கொண்டு எம்மக்கள் விழித்தெழுந்து
முன்னை நிலை நாட்ட அருள்க என்தாய்!
"ஆகுக! ஆக்குக!"
கற்றவன்
ஆகு, கற்றவனை ஆக்கு
சிந்திப்பவன்
ஆகு, சிந்திப்பவனை ஆக்கு
பண்பானவன்
ஆகு, பண்பானவனை ஆக்கு
மொத்தத்தில்
மனிதன்
ஆகு, மனிதனை ஆக்கு”
கல்லூரி கீதம்:
ஒளி
பெறுவோம் நாம் ஒளி பெறுவோம்
ஒளிக்கல்லூரிக் கலையகத்தே
தான்தோன்றீஸ்வரர் அருளுடனே
ஒளி
பெறுவோம் நாம் உயர்வுறுவே.
(ஒளி பெறுவோம்)
பழிஇழிபாவ
இருள் மறைய
பாரினில்
அறத்தின் ஒளி பெருக
அழிவிலாக்
கல்விதனைப் பெற்றே
ஆக்குவோம்
இன்னும் பல பேரை
(ஒளி பெறுவோம்)
ஒளிக்கல்லூரி
நிதம் வளர
ஓங்கியே
கல்விப் பயிர் வளர
களிப்புடன்
உலகம் அமைதி பெற
கருணைக்
கடவுளைப் பணிந்திடுவோம்
(ஒளி பெறுவோம்)
கசடறக்
கலைபல கற்றிடுவோம்
அறியாமை
இருளை அகற்றிடுவோம்
வீறுடன்
தரணியில் விழித்தெழுந்து
முதன்மை
பெற்றிட அருள்தாயே!
(ஒளி பெறுவோம்)